அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கே.போக் என்பவரின் பதவிக் காலம் 3.3.1849 அன்று முடிவடைந்தது. அடுத்துப் புதிய ஜனாதிபதியாக ஸக்கேரி டெய்லர் என்பவர் பதவியேற்க வேண்டும். மார்ச் 4ம் தேதி ஞாயிறு என்பதால் அவர் அன்று பதவியேற்க மறுத்துவிட்டார். ஒரு நாள் கூட ஜனாதிபதி இல்லாமல் ஆட்சி இருக்கக் கூடாது என்று அமெரிக்கர்கள் எண்ணினர். அதற்கு என்ன செய்வது? பழைய ஜனாதிபதி ஒரு நாள் கூட நீடிக்கக் கூடாது என்பது சட்டம். தவிர்க்க முடியாத நிலையில் செனட் சபையின் தலைவராக உள்ளவர் பதவி ஏற்கலாம்.
எனவே, செனட்டின் தலைவரான டேவிட் ரைஸ் ஆக்சிஸன் என்பவரை 4.3.1849 அன்று ஜனாதிபதியாக பதவி ஏற்கச் செய்தார்கள். 24 மணி நேரம் மட்டும் அமெரிக்க ஜனாதிபதியாக அவர் இருந்தார்.
மற்ற ஜனாதிபதிகளை விட இந்த ஒரே ஒரு நாள் ஜனாதிபதி அமெரிக்காவில் புகழ் பெற்றார். 1928ம் ஆண்டு அக்டோபர் மாதம், இவரது முழு உருவச் சிலையை பிளாட்ஸ் என்னும் இடத்தில் திறந்து வைத்தனர். அந்தச் சிலையில் அடியில் "அமெரிக்காவின் ஒரு நாள் ஜனாதிபதி' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
***
வலிப்பு நோய்களில் நான்கு வகை உண்டு. சிறிய வலிப்பு, பெரிய வலிப்பு, ஒரு பக்க வலிப்பு, சைகோ மோட்டார் வலிப்பு என்பனவாகும். இந்த நான்கும் ஒருவருக்கே வருவதில்லை. வலிப்பு நோய் தோன்றும் இடம் பெருமூளை தான். இந்த நோயின் ஆரம்பமே மூளை தான். ஏதாவது ஒரு நோய் மூளையைத் தாக்கினால் அது வலிப்பாக மாறுகிறது. எலக்ட்ரோ என்சபலோ கிராம் என்ற கருவி வலிப்பு நோய்களைக் கண்டுபிடித்து அறிய உதவுகிறது. எந்த மாதிரி வலிப்பு என்று கண்டுபிடித்து அதற்கு ஏற்ற முறையில் சிகிச்சை செய்தால் எண்பது சதவிகிதம் குணப்படுத்தி விடலாம் என நரம்பியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
நன்றி : இன்று ஒரு தகவல் ஓர்குட் குழுமம்.
அமெரிக்காவின் ஒரு நாள் ஜனாதிபதி
Posted by Unknown at 0 comments
Labels: அமெரிக்காவின் ஒரு நாள் ஜனாதிபதி
Subscribe to:
Posts (Atom)