நெட்வொர்க் என்னும் முறையில் இணைக்கப்பட்டுள்ள ஒரு நிறுவனத்தின் எல்லா கணினிகளையும் ஒரே கணினியில் இருந்து அணைக்கலாம்!
1. start=>run=>cmd=>Enter
2. type shutdown -i
3. browse and shut it down
இந்த கட்டளை மூலம் எல்லா கணினியும் அணைந்து விடும். அலுவலக நேரத்தில் இதனை செய்து பார்த்து மாட்டிக் கொள்ளாதீர்கள்!!!
இணையத்தில் தமிழ் மின் நூல்களைப் படிக்க... சில தளங்கள்..
www.tamilnation.org
www.sysindia.com/tamil/index.html
www.tamil.net/aggregator/sources/26
www.cookoou.blogspot.com
www.varalaaru.com
நன்றி:இன்று ஒரு தகவல். பொது அறிவு தனிஇனம் : ஒர்குட் குழுமம்
_________________
கணினி தகவல் -I
Posted by Unknown at 0 comments
Labels: கணினி தகவல் -I
நம் நாடு-II
பூமியின் பரப்பளவில் இந்தியா 2.4 சதவிதம் உள்ளது.
மக்கள் நெருக்கம் குறைவான மாநிலம்
அருணாசலப் பிரதேசம் இங்கு ஒரு கி.மீ பரப்பிற்கு
13 பேர் வசிக்கின்றனர்.
மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள மாநிலம் டில்லி.
இங்கு ஒரு கி.மீ பரப்பிற்கு 294 பேர் வசிக்கின்றனர்.
இந்தியாவின் முதல் தங்க சுத்தகரிப்பு நிலையம்
மகாராஷ்டிரா மானிலத்தில் உள்ள ஷிர்பூரில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தியாவின் இரட்டை நகரம் எனப்படுவது ..
ஐதராபாத் _ செகந்திராபாத்.
புனேவை தட்சண இளவரசி என அழைப்பர்.
இங்கு ஆகாகான் மாளிகை உள்ளது.
லக்னவ் ஆரம்பகாலத்தில் லட்சுமணபுரி என்று
அழைக்கப்பட்டது.
பீஜப்பூர் நகரம் கர்நாடகாவில் உள்ளது இதன்
ஆரம்ப காலப் பெயர் விஐயபுரா.
இந்தியாவில் உள்ள முக்கிய மலைத் தொடர்கள்
ஏழு ஆகும்.
இமயமலை கிழக்கிலிருந்து மேற்காக 2500 கி.மீ.
நீளமுடையது.இதன் மொத்த பரப்பளவு 5 லட்சம் கி.மீ.
நன்றி:இன்று ஒரு தகவல். பொது அறிவு தனிஇனம் : ஒர்குட் குழுமம்
Posted by Unknown at 0 comments
Labels: நம் நாடு-II
நம் நாடு-I
மத்தியப்பிரதேசத்தில் அதிகம் கிடைக்கும் உலோகம் மாங்கனீசு.
போபாலில் பார்க்க வேண்டிய இடங்கள்
நவாப்அரண்மனை,லட்சுமி நாராயணர் ஆலயம்.
மத்தியப்பிரதேசத்திலுள்ள முக்கிய நகரங்கள்
போஐபுரி சிக்வோடு,ரெய்சன்.
சாஞ்சி ஸ்தூபிகள் மத்தியப்பிரதேசத்தில் உள்ளபோபாலில் இருந்து சுமார் 68 கீ.மூ.துரத்தில் உள்ளது.
சாஞ்சி ஸ்தூபிகளின் உயரம்,24 மீட்டர் குறுக்களவு 37 மீட்டர்.
மகாராஷ்ட்ரா மாநிலத்தின் தலை நகர் முப்பை
மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பரப்பளவு 3,07,713 சதுர கி மீ.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 48 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 288 சட்ட மன்ற தொகுதிகள் உள்ளன.
மகாராஷ்ட்ரா மாநிலத்தின் வடக்கே,மத்தியப்பிரதேசமும்,தெற்கே கோவாவும் உள்ளது.மேற்க்கே,அரபிகடலும்,வடமேற்கே குஜராத்தும் உள்ளது.இதன் தென்கிழக்கில் கர்நாடகமும்,ஆந்திராவும் உள்ளது.
_________________
மிசேராம் மாநிலத்தின் பரப்பளவு 21,081 சதுர கி.மீ.
மிசேராம் மாநிலத்தில் மூன்று மாவட்டங்கள் உள்ளன.
நாகலாந்து மாநிலத்தின் பரப்பளவு 16579 சதுர கி.மீ.
நாகலாந்து மாநிலத்தின் தலை நகர் கோஹிமா.
நாகலாந்து மாநிலத்தின் எட்டு மாவட்டங்கள் உள்ளன.
நாகலாந்து மாநிலத்தில் தனசிரி,தோயங்க் ஆறுகள் ஒடுகின்றன.
முதன் முதலில் இந்திய சட்ட மந்திரியாக பதவி வகித்தவர் அம்பேத்கர்.
தப்தி நதி மகாதேவ் மலையில் உற்பத்தி ஆகிறது
தப்தி நதியின் நீளம் 680 கி.மீ.
மகா நதி பஸ்தார் குன்றுகளில் (ராய்ப்பூர்) உற்ப்பத்தி ஆகிறது.
மகா நதியின் நிளம் 890 கி.மீ
நன்றி:இன்று ஒரு தகவல். பொது அறிவு தனிஇனம் : ஒர்குட் குழுமம்
Posted by Unknown at 0 comments
Labels: நம் நாடு-I
தகவல் களஞ்சியம் -IV
மின்சார பல்பை கண்டுபிடித்த விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனுக்கு இருட்டைக் கண்டால் பயம்!
* சூதாட்டம் விளையாடுபவர்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை `கிங்'. சீட்டுகளில் இருக்கும் 'கிங்'குகள் யார்...யார் தெரியுமா?
ஸ்பேட்ஸ் சீட்டில் இருப்பது கிங் டேவிட், கிளப்ஸில் இருப்பது கிங் அலெக்சாண்டர், ஹார்ட்ஸில் இருப்பது கிங் சார்லிமேக்னே, டயமண்ட்ஸில் இருப்பது கிங் ஜுலியஸ் சீஸர்.
* வாத்துகள் விடும் `க்வாக்...க்வாக்' சத்தம் எதிரொலிப்பதில்லை. ஏன் என்று யாருக்கும் தெரியவில்லை!
* மலர்களில் அமர்ந்து தேனை உறிஞ்சும் வண்ணத்து பூச்சிகளுக்கு சுவையுணர்வு நரம்புகள் அதன் பாதத்தில் உள்ளன!
* உலகில் உள்ள அனைத்து பனிக் கரடிகளும் இடதுகை பழக்கம் உள்ளவையே!
* நமது உடம்பில் அதிக வலிமையான தசை நாக்கு!
* விலங்குகளில் தாண்டி குதிக்க முடியாத மிருகம் யானை!
* முதன்முதலாக ஆங்கிலேயர்கள், ஆஸ்திரேலிய கண்டத்தில் இறங்கியபோது, அங்கு துள்ளிக் குதித்து ஓடிய கங்காருகளை மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். இது என்ன விலங்கு? என்று அங்கிருந்த பழங்குடியின மக்களிடம் கேட்டனர். அவர்கள் தங்களது மொழியில், ``கன்..கு..ரூ'' என்று கூறியுள்ளனர். அப்படி என்றால் `நீங்க சொல்றது எங்களுக்கு புரியவில்லை' என்று அர்த்தம்! அதையே பெயராக மாற்றி விட்டனர் ஆங்கிலேயர்கள்!
* கல்லறை என்பதை குறிக்கும் `சிமெட்ரி' என்ற ஆங்கிலச் சொல் கிரேக்கத்திலிருந்து வந்தது. கிரேக்க மொழியில் கொய்மெட்ரியன் என்பதற்கு தூங்குமிடம் என்று அர்த்தம்! இதுவே மருவி இப்படி ஆகிவிட்டது.
நன்றி:இன்று ஒரு தகவல். பொது அறிவு தனிஇனம் : ஒர்குட் குழுமம்
Posted by Unknown at 0 comments
Labels: தகவல் களஞ்சியம் -IV
சில சுவையான கதைகள் -II
அஹிம்சாவாதியும்.. அறிவியல் அறிஞரும்..
--------------------------------------------------------------------
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும, காந்தியாருக்கும் நடந்த கடிதப் போக்குவரத்து....
அக்டோபர் 2, 1931. ஐன்ஸ்டீன் எழுதியது..
பெருமதிப்பிற்குரிய திரு. காந்தி!
என் இல்லத்திற்கு வருகை தந்திருக்கும் உங்கள் நண்பரின் வாயிலாக இந்தக் கடிதத்தை அனுப்ப விழைகின்றேன். உங்கள் வேலைகளின் மூலமாக நீங்கள் அஹிம்சை மூலம் வெற்றியடைய முடியும் என்று காட்டி இருக்கின்றீர்கள். அதுவும் இம்சையை நம்பி செயல்படும் மனிதர்களிடமும் அஹிம்சை காட்டி வெல்ல முடியும் என்று காட்டி இருக்கின்றீர்கள்.
உங்களின் எடுத்துக்காட்டு உங்கள் நாட்டின் எல்லைகளைத் தாண்டியும் பரவும் என்று நம்புவோம். அத்தகைய நம்பிக்கை பன்னாட்டு அதிகாரம் ஒன்று உருவாகவும், அனைவரும் மதிக்கும் படியும், போர் இல்லாமலேயே பிரச்னைகளைத் தீர்க்கும் விதமாகவும் உதவும்.
உண்மையும் வியப்புடனும்,
உங்கள்,
ஆ. ஐன்ஸ்டீன்
நான் உங்களை நேருக்கு நேர் சந்திக்க இயலும் என்று நம்புகின்றேன்.
_________________
காந்தியாரின் பதில்..
லண்டன், அக்டோபர், 18, 1931
அன்பு நண்பரே,
சுந்தரம் மூலம் தாங்கள் அனுப்பிய அழகிய கடிதத்தைக் கண்டு மகிழ்வுற்றேன். உங்கள் பார்வைக்கு என் காரியம் தென்பட்டது குறித்து மிகுந்த ஆறுதல் அளிக்கின்றது. நானும் உங்களை நேருக்கு நேர் அதுவும் இந்தியாவில் என் ஆசிரமத்தில் காண வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.
தங்கள் உண்மையுள்ள,
மோ.க. காந்தி.
------------------------------------------
மதிநுட்பம் இல்லாத மாநிலம்..
எஃப்.ஏ. தேர்வில் முதல் மாணவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பீகாரைச் சேர்ந்த அந்த மாணவர். இதற்கு மாதம் இருபத்தைந்து ரூபாய் உபகாரச் சம்பளமாக வழங்கியது கல்லூரி. இந்த உதவித் தொகை தொடர்ந்து பல ஆண்டுகள் அவருக்குக் கிடைத்து வந்தது. பின்னர் பி.ஏ. தேர்விலும் முதல் மாணவராகத் தேர்வானார். உபகாரச் சம்பளம் மாதம் தொண்ணூறு ரூபாயாக உயர்த்தித் தரப்பட்டது.
இவ்வாறு முதல் மாணவராகவே படிப்பில் தேர்ச்சி பெற்றுக் கொண்டே அந்த மாணவர் வந்ததில் ஒரு சிறப்பு உண்டு. அந்தக் காலகட்டத்தில் பீகார் மாநிலம் வங்காள மாநிலத்தில் சேர்ந்திருந்தது. பீகார் மாநில மாணவர்கள் எல்லோரும் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில்தான் சேர்ந்து படிக்க வேண்டும்.
வங்க மொழி பேசுவோர் பீகாரிகளைப் படிப்பறிவு இல்லாதவர்கள், மதிநுட்பம் இல்லாதவர்கள் எனப் பேசுவார்கள். இப்படி கேவலமாய்ப் பார்ப்பதை மாற்றியமைக்க வேண்டும் என்ற வெறியோடுதான் அந்த மாணவர் படித்து முதல் மாணவராக வந்திருக்கிறார்.
அந்த மாணவர் யார் என்றுதானே கேட்கிறீர்கள்? இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திரபிரசாத்.
_____________________________________________
கோர்ட்டுக்குப் போன குதிரை!
நீதிமன்றத்திற்கு தினமும் இராஜாஜி தனது குதிரை வண்டியில் செல்வது வழக்கம். ஒருநாள் நீதிமன்றத்திற்குப் புறப்படும்போது வண்டியில் பூட்டிய குதிரையின் மீது புழுதியும் சாணமும் படிந்திருப்பதைக் கண்டார். குதிரையைக் குளிப்பாட்டி வரும்படி கூறினார்.
வண்டிக்காரன் குதிரையைக் குளிப்பாட்டி வண்டியில் பூட்டினான். இராஜாஜி ஏறி அமர்ந்தார். குதிரைக்காரன் ஏறி உட்கார்வதற்குள் குதிரை வண்டியை இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கிவிட்டது. இராஜாஜியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஏதாவது ஓர் இடத்தில் குதிரை களைப்படைந்து நிற்கத்தானே போகிறது என்ற நம்பிக்கையில் அமைதியாக உட்கார்ந்துவிட்டார்.
குதிரை ஓடி கடைசியாக ஓரிடத்தில் போய் நின்றது. அது எந்த இடம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அது இராஜாஜி வழக்கமாகச் செல்லும் நீதிமன்றம்.
நன்றி:இன்று ஒரு தகவல். பொது அறிவு தனிஇனம் : ஒர்குட் குழுமம்
Posted by Unknown at 0 comments
Labels: சில சுவையான கதைகள் -II
சில சுவையான கதைகள் -I
மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர் பேச்சில் நகைச்சுவை பொங்கும். ஒருமுறை கச்சேரி ஒன்றில் தமது பாட்டுக்குப் பொருந்தாமல் மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்த வித்வானைப் பார்த்துச் சொன்னார்: ""என் பாட்டுக்கு வாசிப்பா. நீ "உன்பாட்டுக்கு' வாசிச்சுக்கிட்டே போறியே.''
-------------------------------------------------------------------
ஒரு முறை திருச்சிக்கு வந்திருந்தார் அப்போதைய முதலமைச்சர் காமராஜர். அவரை வரவேற்கக் கையில் மாலையுடன் காத்திருந்தார் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர். அவரைக் கண்ட காமராஜர், ""படிப்பு சொல்லிக் கொடுக்கச் சொன்னா படிக்காதவனுக்கு மாலை போட்றதுக்கு க்யூல நிககி்றீங்களே'' என்றார்.
--------------------------------------------------------------------
""சின்ன வயதில் எனக்குப் பெரிதும் பொறுமை கிடையாது. திருமணத்திற்குப் பின்தான் நான் பொறுமையாளன் என்று பலராலும் பாராட்டப்பெற்றேன். பொறுமை பொலிவது உண்மையானால், அது இயற்கையில் அரும்பியதாகாது. அது கமலாம்பிகையினின்று இறங்கிக் கால் கொண்டது என்றே சொல்வேன்''- என்று சுயவிமர்சனம் செய்துகொண்டவர் தமிழ்த்தென்றல் திரு.வி.க., அமைதிக் கொள்ள வைத்த கமலாம்பிகை யார் தெரியுமா? அவர் மனைவி.
__________________________________
இந்திராவின் ஆட்சிக்காலம் அது...
மும்பை நேரு விஞ்ஞான மையத்தில் அப்துல்கலாம் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது எஸ்.எல்.வி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நேரம். ""பிரதமர் இந்திரா காந்தி தங்களைச் சந்திக்க விரும்புகிறார். நாம் இருவரும் சேர்ந்து சென்று சந்திக்கலாம்'' என்று இஸ்ரோ தலைவர் தவான், அப்துல்கலாமை அழைத்தார்.
கலாம் செல்வதற்குத் தயங்கினார். தவான் காரணம் கேட்டதற்கு கலாம் சொன்னார்: ""நான் எப்போதும்போல் சாதாரண நீலவண்ணச் சட்டையே அணிந்திருக்கிறேன். கால்களுக்குப் பூட்சுகள் இல்லை. செருப்புகள்தான் அணிந்துள்ளேன். இந்தக் கோலத்தில் பிரதமரைச் சந்திக்கத் தயக்கமாக இருக்கிறது'' என்றார்.
அதற்கு தவான், ""உடையைப் பற்றி கவலைப்படாதீர்கள். வெற்றி என்கிற பேரழகான ஆடையை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்'' என்று கூறி பிரதமரிடம் அழைத்துச் சென்றார்.
-----------------------------------------------------------------------
நன்றி:இன்று ஒரு தகவல். பொது அறிவு தனிஇனம் : ஒர்குட் குழுமம்
Posted by Unknown at 0 comments
Labels: சில சுவையான கதைகள் -I
மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்
மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்
உங்களுடைய மொபைல் போன் திருடப்பட்டால் நீங்கள் இழப்பது உங்கள் போன் மட்டுமல்ல அதன்பின் எடுத்தவர் பயன்படுத்தும் கால்களுக்கான கட்டணமும் தான். எனவே திருடு போனபின் லபோ திபோ என வருத்தப்படுவதைக் காட்டிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாமே!
1. முதலில் உங்கள் போனை அடுத்தவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காட்டுவதனைத் தவிர்க்கவும். எப்போதும் உங்களுடனேயே போனை வைத்திருக்கவும். டேபிள் அல்லது தரையில் வைக்கவே கூடாது. கூட்டமான இடங்களில் சைலன்ட் மோடில் வைக்கவும். வைப்ரேசன் மட்டும் போதும். ரிங் டோன் அடித்து உங்களிடம் போன் இருப்பதனைக் காட்டிக் கொள்ள வேண்டாம்.
நன்றி:இன்று ஒரு தகவல். பொது அறிவு தனிஇனம் : ஒர்குட் குழுமம்
2. உங்கள் போனில் ""பின்'' Personal Identification Number (PIN)எண்ணைப் போட்டுப் பயன்படுத்தவும். மற்றவர்கள் பயன்படுத்துவது தவிர்க்கப் படும்.
3. உங்களுடைய போனில் உங்கள் இனிஷியல்களை லேசாக எழுதி வைக்கலாம்.
4. போனின் 15 இலக்க ஐ.எம்.இ.ஐ. எண்ணைத் International Mobile Equipment Identity (IMEI) number தெரிந்து அதனைப் பாதுகாப்பாக எங்காவது குறித்து வைக்கவும். போன் தொலைந்து அல்லது திருடப்பட்டால் இந்த எண்ணைக் கொண்டு போன் செயல்படுவதனை முடக்கலாம். இந்த எண்ணை அறிய நீங்கள் *#06# என்ற எண்ணை டயல் செய்திடவும். அதே போல் உங்கள் சிம் கார்டிலும் ஒரு எண் அச்சாகி இருக்கும். அதனையும் குறித்து வைக்கவும். போலீஸ் அல்லது உங்களுக்கு சேவை தரும் நிறுவனத்திடம் இந்த எண்களைத் தெரிவித்தால் அவர்கள் உடனே தடுப்பு நடவடிக்கை எடுப்பார்கள்.
நன்றி:இன்று ஒரு தகவல். பொது அறிவு தனிஇனம் : ஒர்குட் குழுமம்
Posted by Unknown at 0 comments
Labels: மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்
தகவல் களஞ்சியம் -III
1. மனிதன் இறக்கும் போது உடலில் இருந்து கடைசியாக விலகும் புலன் கேட்டல் ஆகும். பார்வையே முதலில் பிரியா விடை பெறும் புலனாகும்.
2. ஸ்ட்ராபரி பழங்களில் மட்டுமே விதைகள் பழத்திற்கு வெளியே முளைக்கின்றன.
3. ஆனைக்கொய்யா (Avacado) விலேயே பழங்களில் அதிக கலோரிகள் உள்ளன. ஒவ்வொரு 100 கிராமிலும் 167 கலோரிகள் உள்ளன.
4. ஆகாயப்பரபில் இருந்து விழும் தூசு துணிக்கைகளால் பூமியின் எடை ஆண்டொன்றுக்கு 100 டன்களால் அதிகரிக்கின்றது.
5. புவியீர்ப்பு விசைகாரணமாக பூமியில் உள்ள மலைகள் 15,000 மீட்டருக்கு மேல் உயரமாக இருப்பது சாத்தியப்படாது.
6. விண்வெளியில் மேலதிகமாக எடுத்துச் செல்லப்படும் ஒவ்வொரு கிலோ எடைக்கும் 530 கிலோ கிராம் மேலதிக எரிபொருள் தேவை.
7. ஒவ்வொரு ஆண்டும் சந்திரன் பூமியை விட்டு இரண்டு அங்குலம் அப்பால் விலகிக் செல்கிறது.
8. மனித உடலில் உள்ள குருதிக்குழாய்களை அடுத்தடுத்து ஒவ்வொன்றாக அடுக்க முடிந்தால் அதனை 12,000 மைல்கள் நீளத்திற்கு நீட்ட முடியும்.
9. பௌர்ணமி முழு நிலவில் பிரகாசம் அரை நிலவிலும் 9 மடங்கு அதிகம்.
10. உலகில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்கள் ஒரு முறையேனும் தொலைபேசியில் பேசியதில்லை
நன்றி:இன்று ஒரு தகவல். பொது அறிவு தனிஇனம் : ஒர்குட் குழுமம்
Posted by Unknown at 0 comments
Labels: தகவல் களஞ்சியம் -III
சில இலவச தொலைபேசி எண்கள்
சில இலவச தொலைபேசி எண்கள் ..
Railway
Indian Railway General Enquiry 131
Indian Railway Central Enquiry 131
Indian Railway Reservation 131
Indian Railway Railway Reservation Enquiry 1345,1335,1330
Indian Railway Centralised Railway Enquiry 1330/1/2/3/4/ 5/6/7/8/9
Home Appliances
Aiwa/Sony - 1800 11 1188
Anchor Switches - 1800 22 7979
Blue Star - 1800 22 2200
Bose Audio - 1800 11 2673
Bru Coffee Vending Machines - 1800 44 7171
Daikin Air Conditioners - 1800 444 222
DishTV - 1800 12 3474
Faber Chimneys - 1800 21 4595
Godrej - 1800 22 5511
Grundfos Pumps - 1800 33 4555
LG - 1901 180 9999
Philips - 1800 22 4422
Samsung - 1800 113 444
Sanyo - 1800 11 0101
Voltas - 1800 33 4546
WorldSpace Satellite Radio - 1800 44 5432
Couriers/Packers & Movers
ABT Courier - 1800 44 8585
AFL Wizz - 1800 22 9696
Agarwal Packers & Movers - 1800 11 4321
Associated Packers P Ltd - 1800 21 4560
DHL - 1800 111 345
FedEx - 1800 22 6161
Goel Packers & Movers - 1800 11 3456
UPS - 1800 22 7171
Banks
ABN AMRO - 1800 11 2224
Canara Bank - 1800 44 6000
Citibank - 1800 44 2265
Corporatin Bank - 1800 443 555
Development Credit Bank - 1800 22 5769
HDFC Bank - 1800 227 227
ICICI Bank - 1800 333 499
ICICI Bank NRI - 1800 22 4848
IDBI Bank - 1800 11 6999
Indian Bank - 1800 425 1400
ING Vysya - 1800 44 9900
Kotak Mahindra Bank - 1800 22 6022
Lord Krishna Bank - 1800 11 2300
Punjab National Bank - 1800 122 222
State Bank of India - 1800 44 1955
Syndicate Bank - 1800 44 6655
நன்றி:இன்று ஒரு தகவல். பொது அறிவு தனிஇனம் : ஒர்குட் குழுமம்
Posted by Unknown at 0 comments
Labels: சில இலவச தொலைபேசி எண்கள்
தமிழ் பெயர்கள்
தமிழில் டீக்கு "தேநீர்',
காபிக்கு "குளம்பி' என்று
பெரும்பாலோருக்குத் தெரியும்.
மற்ற சில முக்கியமான உணவு
பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!
சப்பாத்தி - கோந்தடை
புரோட்டா - புரியடை
நூடுல்ஸ் - குழைமா
கிச்சடி - காய்சோறு, காய்மா
கேக் - கட்டிகை, கடினி
சமோசா - கறிப்பொதி, முறுகி
பாயசம் - பாற்கன்னல்
சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு
பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி
பொறை - வறக்கை
கேசரி - செழும்பம், பழும்பம்
குருமா - கூட்டாளம்
ஐஸ்கிரீம் - பனிக்குழைவு
சோடா - காலகம்
ஜாங்கிரி - முறுக்கினி
ரோஸ்மில்க் - முளரிப்பால்
சட்னி - அரைப்பம், துவையல்
கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு
பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்
போண்டா - உழுந்தை
ஸர்பத் - நறுமட்டு
சோமாஸ் - பிறைமடி
பப்ஸ் - புடைச்சி
பன் - மெதுவன்
ரோஸ்டு - முறுவல்
லட்டு - கோளினி
புரூட் சாலட் - பழக்கூட்டு
நன்றி :
sify.com ல்
கே.ஆர்.ரவீந்திரன், சென்னை.
நன்றி:இன்று ஒரு தகவல். பொது அறிவு தனிஇனம் : ஒர்குட் குழுமம்
Posted by Unknown at 2 comments
Labels: தமிழ் பெயர்கள்
தகவல் களஞ்சியம்-II
பறவை இனங்களில் ஆந்தையின் முட்டை மாத்திரமே உருண்டை வடிவில் இருக்கும்.
இரவு வேளைகளிலும் ஆக்சிஜனை வெளிப்படுத்தும் தாவரங்கள் துளசியும் அரசமரமும் தான்.
இலங்கையில் முதன்முதலாக உற்பத்தி செய்யப்பட்டு 2003 நவம்பரில் மோட்டார் வாகன ஆணையாளர் திணைக்களத்தில் பதிவாகி விற்பனைக்கு வந்த கார் மைக்கரோ ஆகும்.
முதலையில் அடி வயிற்றுப் பகுதி தோலில் "புல்லட் புரூ்ஃப்" உடை தயாரிக்கிறார்களாம்.
உலகில் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் உள்ள நாடு இந்தோனேசியா.
பல பாடல்களைப் படைத்த பாரதியார் தாலாட்டுப் பாடல்களைப் பாடவே இல்லை.
93 நாடுகளில் ஒரே நேரத்தில் விற்பனையாகி புத்தக உலகில் சாதனன படைத்த "ஹரிபொட்டர்" புத்தகத்தை எழுதியவர் இங்கிலாந்து பெண் எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங் ஆகும்.
மின்மினிப் பூச்சி எவ்வாறு ஒளியை உண்டாக்குகிறது?
மின்மினிப் பூச்சியின் அடிவயிற்றில்
ஒரு வகையான உயிரணுக்கள் உள்ளன.
இதில் "லூசிபெரின்' என்ற ரசாயனப் பொருள் உள்ளது.
இந்த உயிரணுக்கள் மூச்சுக் குழலுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மின்மினிப் பூச்சி மூச்சுவிடும் போது பிராண வாயுவுடன் அடிவயிற்றிலுள்ள லூசிபெரின் சேர்ந்து ஒளியை உமிழ்கிறது.
இச்செயல் நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நடைபெறுகிறது.
இது ஒரு உயிர் வேதியியல் செயலாகும்.
______________________________________
டைனமிட் வெடி பொருளைக் கண்டுபிடித்தவர் ஆல்பிரட் நோபல். அதனால் பெரும் செல்வம் கிடைக்கப் பெற்றும் கண்டுபிடிப்பின் மூலம் தீமைகளே அதிகம் இருப்பதை உணர்ந்து நிம்மதி இழந்தார். பின் தனக்குக் கிடைத்த பணத்தை விஞ்ஞானிகளைக் கெளரவிக்க நோபல் கமிட்டியை உருவாக்கினார். இயற்பியல், வேதியியல், மருத்துவம், சமாதானம் ஆகியவற்றுக்கு நோபல் பரிசும் இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கு நோபல் நினைவுப் பரிசும் அளிக்கப்படுகிறது.
நோபல் கமிட்டி நான்கு வேறுபட்ட நிறுவனங்கள் உள்ளடக்கிய அமைப்பாகும். இயற்பியல், வேதியியல், பொருளாதாரத் துறைகளை ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்விஸ் அகாடமி தேர்வு செய்கிறது.
காரோலின்ஸ்கா நிறுவனம் மருத்துவத்துக்கும் ஸ்விஸ் அகாடமி இலக்கியத்துக்கும் நோபல் கமிட்டி அமைதிக்கும் பரிசுகளைத் தேர்ந்தெடுக்கிறது..
பசிபிக் கடலில் உள்ள சில மீன்கள் பஞ்ச வர்ணங்களில் உள்ளன. "கிளி மீன்கள்'' என்று இவைகள் அழைக்கப்படுகின்றன. இவற்றின் பற்கள் கிளியின் அலகு போல, உதட்டுக்கு வெளியே நீண்டு கொண்டிருக்கும். இவைகள் சங்கு, கிளிஞ்சல் போன்றவைகளை விழுங்கி தொண்டையில் வைத்துக் கொண்டு பின்னர் நொறுக்கி சாப்பிடுகிறதாம்.
* ஆஸ்திரேலியாவில் உள்ள கோலா எனப்படும் கரடி இனம் தண்ணீரே குடிப்பதில்லை. வெறும் யூகலிப்டஸ் மரத்தின் பட்டையைத் தின்றே உயிர் வாழ்கிறது.
*உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் வாழ்பவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு அப்பாவின் பெயரைத்தான் இனிஷியலாகப் போடுகிறார்கள். ஆனால் ஸ்பெயின் நாட்டில் மட்டும் அம்மாவின் பெயரை இனிஷியலாகப் பயன்படுத்துகிறார்கள்.
*நாம் முகவரியுடன் சேர்த்து பின்கோடையும் குறிப்பிடுவோம். இதில் உள்ள 6 எண்களில் முதல் எண் மாநிலத்தையும், அடுத்த இரண்டு எண்கள் துணை வட்டத்தையும், கடைசி 3 எண்கள் குறிப்பிட்ட தபால் நிலையங்களையும் குறிக்கிறது.
* ஐரோப்பாவில் ஏவப்படும் ராக்கெட்டுகள் "ஏரியன்'' என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. `ஏரியன்' என்பதற்கு ராக்கெட் என்பது பொருள்.
* ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள போர்த் என்னும் ரெயில்வே பாலம் குளிர்காலத்தில் இருப்பதைவிட கோடை காலத்தில் ஒரு மீட்டர் அதிகமாய் நீண்டு காணப்படுகிறதாம்.
* பைசா நகரத்தில் உள்ள சாய்ந்த நிலை கோபுரத்தைப் போல, வேறு சில கோபுரங்களும் இருக்கின்றன. 1560-ம் ஆண்டில் ருமேனியாவில் கட்டப்பட்ட கோபுரம் ஒன்றும், 1573-ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நாட்டில் கட்டப்பட்ட பெரிய கோபுரம் ஒன்றும், பைசா நகரக் கோபுரம் போல சாய்ந்த நிலையில் தரிசனம் அளிக்கிறது.
நன்றி:இன்று ஒரு தகவல்.பொது அறிவு தனிஇனம் : ஒர்குட் குழுமம்
Posted by Unknown at 0 comments
Labels: தகவல் களஞ்சியம்-II
வாழ்க்கையில் முன்னேற ஏழு வழிகள்
வாழ்க்கையில் முன்னேற ஏழு வழிகள்
நன்மை தரும் 7 விடயங்கள்
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்ச்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செலவத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு
வழிகாட்டும் 7 விடயங்கள்
1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்
நல்வாழ்வுக்கான 7 விடயங்கள்
1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத் தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி மேற்கொள்ளுங்கள்
கவனிக்க 7 விடயங்கள்
1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை
நன்றி: ரவி செல்லத்துரை (புதுமை)
நன்றி:இன்று ஒரு தகவல்.பொது அறிவு தனிஇனம் : ஒர்குட் குழுமம்
Posted by Unknown at 0 comments
Labels: வாழ்க்கையில் முன்னேற ஏழு வழிகள்
தகவல் களஞ்சியம் -I
பொடுகை விரட்ட வேப்பம்பூ..
பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.
அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.
பழங்கள்.. பலன்கள்.. பண்புகள்..
ஆரஞ்சு
தென்கிழக்கு ஆசிய நாடுகள்தான் இதன் தோற்றம்.
முக்கிய சீஸன்: ஜனவரி முதல் பிப்ரவரி.
கலோரி அளவு: ஒரு 100 கிராமுக்கு 48 கி.கலோரி.
ஒரு 100 கிராமில்:
நீர் 87.8%
மாவுச்சத்து 10.6%
தாதுக்கள் 0.3%
கால்சியம் 0.05%
இரும்பு 0.1மி.கி.
பொட்டாசியம் 19.7கி.மி.
தாமிரம் 0.07மி.கி.
குளோரின் 3.2.மி.கி.
வைட்டமின் ‘பி’ 120IU
புரோட்டின் 0.9%
கொழுப்பு 0.3%
நார்ச்சத்து 0.3%
பாஸ்பரஸ் 0.02%
சோடியம் 2.1மி.கி.
மக்னீஷியம் 12.9மி.கி.
கந்தகம் 9.3.மி.கி.
வைட்டமின் ‘ஏ’ 350IU
வைட்டமின் ‘சி’ 68IU
பயன்கள்: வைட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளது. மற்ற பழங்களைவிட கால்சியம் அதிக அளவில் இருக்கிறது. பசி உருவாக்குவதில், நுரையீரல் ஆஸ்துமா பிரச்னைகளில், இருதய நோய்களில், எலும்புகளில், பற்களுக்கு மற்றும் உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதில் இந்தப் பழத்தின் பங்கு அதிகம்.
நன்றி:இன்று ஒரு தகவல். பொது அறிவு தனிஇனம் : ஒர்குட் குழுமம்
Posted by Unknown at 0 comments
Labels: தகவல் களஞ்சியம் -I