கேள்வியும் நானே பதிலும் நானே

v காலண்டர் முறையைக் கண்டுபிடித்த நாடு எது?

எகிப்து



v சைகை மொழியைத் கண்டுபிடித்தவர் யார் ?

ஆல்பே சார்லஸ் மைக்கேல் (பிரான்ஸ்)



v கையெழுத்தைப் பற்றி ஆராயும் விஞ்ஞானக் கலைக்கு பெயர் என்ன ?

கிராபாலஜி ( Graphology)



v சூரியக் குடும்பத்தில் மிகச் சிறிய கிரகம் எது?

மெர்க்குரி



v குடிநீரை எளிய முறையில் சுத்தப்படுத்தும் முறைக்கு பெயர் என்ன?

குளோரினேசன் ( Cholorination)



v தமிழ் நாட்டில் ‘குழந்தைகளின் கவிஞர் ’ என்று அழைக்கப்படுபவர் யார்?

அழ. வள்ளியப்பா



v எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி யார்?

பச்சேந்திரி பால்



v ‘சீஸ்மொகிராப் ’ கருவி எதை அளவிடப் பயன்படுகிறது ?

நிலநடுக்கம்



v டென்னிஸ் வரலாற்றில் 1999—ல் முதல் முறையாக சகோதரிகள் சேர்ந்தாற்போல் பட்டம் பெற்றனர். அந்த சகோதரிகள் யார் ?

அமெரிக்காவைச் சேர்ந்த வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் செரீனா வில்லியம்ஸ்



v மிக இளம் வயதிலேயே விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்ற வீஅர் யார்?

போரிஸ் பெக்கர், 17 வயதில்



v ஆசியக் கண்டத்திலேயே மிகப் பெரிய நகரம் எது?

டோக்கியோ



v பேருந்தைக் கண்டுப்பிடித்தவர் யார் ?

ஹென்றி ·போர்டு



v ஈராக் நாட்டின் தலைநகர் எது? அதன் முந்தைய பெயர் என்ன?

பாக்தாத். மெசபடோமியா



v பேனாவைக் கண்டுப்பிடித்தவர் யார் ?

லூயிஸ் ஜே. வாட்டர்மேன்



v உலகிலேயே கிகப் பெரிய கோயில் எது?

அங்கோர் வாட் (கம்போடியா)

நன்றி : இன்று ஒரு தகவல் ஒர்குட் குழுமம்

துளிகள் ...

சின்னச் சின்னத் தகவல்கள்.. (2)
அடிக்கடி தாடி, மீசை சேவ் பண்ணினா நெறய முடி வளரும்னு நெனச்சா அது உங்க முட்டாத்தனம்… இத நான் சொல்லலீங்க… அதிகம் படிச்ச டாக்டர்ஸ்…



அந்த காலத்திலயே சாப்பாட பதப்படுத்தி டப்பால அடச்சு போருக்கு அனுப்பிச்சி வச்சாராம் நம்ம “மாவீரன் நெப்போலியன்”.



உலகம் முழுக்க ஒரு வருஷத்துக்கு 40 லட்சம் டன் உப்பு தேவப்படுதாம்…



லாட்டரிக்கு பேர் போன “பூட்டான்”ல சினிமாத் தேட்டரே கிடையாதாம்…



ஆரஞ்சு நிறம் மனசுக்கு மகிழ்ச்சியத் தருமாம்.



நம்ம டைரக்டர் அமீர் இது வரையும் அவர் எடுத்த படம் ஒன்னக்கூட பாத்தது இல்லியாம்.



நடிகர் பிரகாஜ்ராஜும் நம்ம ராகுல் திராவிட்டும் ஒரே காலேஜாம். பிரகாஜ்ராஜ் சீனியராம்.



செவ்ரலே எஸ்.ஆர்.வி காரோட ஹெட் லைட் வண்டி திரும்பற திசைக்கேத்த மாதிரி ஆங்கிள்ல திரும்புமாம்… சூப்பர்ல…

நன்றி : இன்று ஒரு தகவல் ஒர்குட் குழுமம்

உலகிலேயே ....

உலகிலேயே...
* உலகில் மிகவும் அதிகமானவர்களை வேலையில் வைத்துக் கொண்டிருக்கும் நிறுவனம், "இந்திய ரயில்வே!' பணியாற்றுபவர்கள் 16 லட்சத்து 46 ஆயிரத்து 704 பேர்!

* அதிகமானவர்கள் பணிபுரியும் தொழிற்சாலை: அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ்! ஏழு லட்சம் பேர் இத்தொழிற்சாலையில் பணியாற்றுகின்றனர்!

* உலகில் மிகவும் பழைய நிறுவனம்: "ஸ்டோரா கோப்பார் பெர்க் பெர்க்ஸ்லாக்' என்ற நிறுவனம். மரம், உலோகப் பொருட்கள் விற்கும் நிறுவனம் இது. ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வருகிறது! ஸ்வீடன் நாட்டில் உள்ளது இந்த நிறுவனம்.

* உலகில் அதிகமான பொருட்கள் கண்டுபிடித்து, பேடண்ட் ரிஜிஸ்டர் செய்து இருப்பவர்: தாமஸ் ஆல்வா எடிசன்! 1069 பொருட்கள் ரிஜிஸ்டர் செய்துள்ளார். மின்சாரம், சினிமா புரொஜக்டர் போன்றவை இதில் அடங்கும்!

* அதிக சொத்துக்கள் உள்ள நிறுவனம்: ஜப்பானின், "ப்யூஜி பாங்க்!' ஐந்து லட்சத்து ஏழாயிரத்து 218 மில்லியன் அமெரிக்க டாலர்கள்!

* உலகின் முதல் பில்லியனர்: அமெரிக்காவின் ஜான் டி.டிராக் பெல்லர். 1918ல் 1.25 பில்லியன் டாலர்கள். இப்போதைய மதிப்பில் 17.20 பில்லியன் டாலர்கள்!

* இதுவரை உலகில் மனித இனத்தால் குடிக்கப்பட்ட கோக்கோ கோலா எவ்வளவு தெரியுமா? உலகின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சியான நயாகரா நீர்வீழ்ச்சியில் 38 மணி 2 நிமிடங்கள் தொடர்ந்து கொட்டிக் கொண்டிருக்கும் அளவு!

* உலகிலேயே இதுவரை நடந்த மிகப் பெரிய பண்டமாற்றுதல் என்ன தெரியுமா? 1984 ஜூலை மாதம், ராயல் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ், 36 மில்லியன் பீப்பாய் பெட்ரோல் கொடுத்து பத்து போயிங் 747 விமானங்களை பெற்றதுதான்!

நன்றி : இன்று ஒரு தகவல் ஒர்குட் குழுமம்

பொன்மொழிகள்

* உணர்வுகள் மாறலாம், நினைவுகள் மாறுவதில்லை - ஜோயல் அலெக்சாண்டர்

* அறிவாளிகள் சிறந்த எண்ணங்களை விவாதிக்கின்றனர், நடுத்தரமானோர் நிகழ்ச்சிகளை விவாதிக்கின்றனர், சாதாரணமானோர் மக்களை விவாதிக்கின்றனர்

* சொற்ப இரண்டு நாட்களிலேயே, நாளை என்பது நேற்று என்றாகி விடுகிறது.

* அனைத்துமே பூர்த்தியாகியிருக்க வேண்டும் முடிவில். அவ்வாறு இல்லையெனில் அது முடிவல்ல.

* நட்பு என்பது ஈரமான சிமெண்ட் கலவையில் கால் பதிப்பது போன்றது. சிறிது நேரம் நின்றால் (காலடிச்) சுவடுகளை விட்டுச் செல்வோம், அதிக நேரம் இருந்தால் விட்டுச் செல்ல இயலாது.

* சிந்தனை செய்யா மூளை, தேங்கிய சாக்கடை - யாரோ

* உலகத்திற்கு வேண்டுமென்றால் நீங்கள் ஒரு ஆளாக இருக்கலாம்; ஆனால் யாராவது ஒருவருக்கு நீங்களே உலகமாக இருக்கலாம்.

* நம்பிக்கைக்குரிய நணபருக்கு ஈடு இணையான செல்வம் ஏதுமில்லை

* இளமை என்பது வயதால் அல்ல, எண்ணங்களாலே அறியப்படுகிறது

* உலகிற்கு ஏற்றாற் போல் தன்னை மாற்றிக்கொள்கின்றனர் பலர்; ஆனால் தனக்கு ஏற்றாற் போல், உலகையே மாற்றிக்கொள்கின்றனர் சிலர்- கலாம்

* அடுத்த விளக்கிற்கு ஒளி ஏற்ற உதவுவதால், விளக்கின் ஒளி எவ்வகையிலும் குறைவதேயில்லை - எரின் மேஜர்ஸ்

* நான் தோல்வியுறவில்லை; மாறாக நான் கண்டுபிடித்த 10,000 வழிமுறைகளில் எதுவும் சரியில்லை - தாமஸ் ஆல்வா எடிசன்

* வாயைத் திறந்து பேசாத வரை ஒவ்வொரு மனிதரும் அறிவாளிகளே - ஆனென்.


நன்றி : இன்று ஒரு தகவல் ஒர்குட் குழுமம்


நன்றி : இன்று ஒரு தகவல் ஒர்குட் குழுமம்.

அப்பா அப்பா !!!!!!!!!!!!

ெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள் சாதாரண மனிதர்களாகத்தான் இருந்துள்ளனர்.

இதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உள்ளன.

அதில்...வில்லியம் ஷேக்ஸ்பியர் எனும் உலக இலக்கிய மேதையின் அப்பா குதிரை லாயத்தினை பராமரித்து வருபவராக இருந்துள்ளார்.

தாமஸ் ஆல்வா எடிசனின் தந்தையோ படகு செய்து வாழ்க்கை நடத்திய ஏழையாக இருந்துள்ளார்.

பெஞ்சமின் பிராங்ளின் தந்தை மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரியாக இருந்துள்ளார்.

பெரும் ஆட்சியாளராக இருந்த ஹிட்லரின் தந்தை சாதாரண கட்டிட கூலித் தொழிலாளி.

ஆபிரகாம் லிங்கத்தின் அப்பாவோ சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டனின் அப்பா சாதாரண வியாபாரிதான்.

ஆங்கில அகராசியின் ஆசிரியரான சாமுவேல் ஜான்சனின் தந்தை மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்த புத்தக வியாபா‌ரியாவார்.

மொழிகளைத் தாண்டி உலக மக்களையே சிரிப்பில் ஆழ்த்திய சார்லி சாப்ளின் தந்தை வீட்டு வேலைக்காரராக இருந்துள்ளார்.

எனவே நாம் இருக்கும் இடம் வேண்டுமானால் கீழே இருக்கலாம். ஆனால் இருக்கப் போகும் இடம் மிக உயர்ந்ததாக இருக்க நாம் தான் முயல வேண்டும்.

பெற்றவர்களின் வழிகாட்டுதல் எத்தனை பேருக்குக் கிடைக்கும். மேற்கண்டவர்களுக்கெல்லாம் அவர்களது அப்பாக்களின் வழிகாட்டுதல் இருந்திருக்குமா என்ன? அவர்களாகவே அவர்களுக்கென ஒரு பாதையை தேர்ந்தெடுத்து அதில் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளனர்.


நன்றி : இன்று ஒரு தகவல் ஒர்குட் குழுமம்.

எனவே நாமும் நமது முன்னேற்றத்திற்கான முதல் அடியை எடுத்து வைப்போம்.

தகவல் துளிகள்

1. வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது.
2.குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்.
3.புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.
4. ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும். ( கொசுக்களிலுமா?)
5. சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.
6. தர்பூசணி, தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.
7. கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக பயன் படுத்த முடியும்.
8. 8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.
9. சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.
10. செடிகளுக்கு, மித சுடான தண்ணீர் ஊற்றினால், விரைவாக வளரும்.
11. இயர் போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.
12. திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும்.
13. கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.
14. எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல வேறு விதமாக இருக்கும்.
15. 40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழ்ப்பான்.
16. சுவீடனில், ஒரு ஹோட்டல், ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும் மீண்டும் கட்டப்படும்.
17. பூனை, ஓட்டகம் மற்றும் ஓட்டக சிவிங்கி மிருகங்கள் தான், வலது, வலது, இடது, இடது என நடக்கும், மற்றவையெல்லாம் வலது, இடது என நடக்கும்.
18. வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.
19. பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும்.
20. நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும். மனித மூளை, 11 வகை இராசாயணத்தை அமைதி படுத்த அனுப்புகிறது.
21. லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார்.
22. 15 எழுத்து ஆங்கில வார்த்தை, எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை: uncopyrightable
23. குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6 வயதில் தான் வளர்கிறது.
24. எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் மூக்கு கண்ணாடி அணிவார்கள்.
25. வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.
26. சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.
27. கண்களை கசக்கும் போது தோன்றும் நட்சத்திரம் மற்றும் கலர்கள், பாஸ்பீன்ஸ் எனப்படும்.


நன்றி : இன்று ஒரு தகவல் ஒர்குட் குழுமம்.