பொடுகிலிருந்து விடுபட...

பொடுகிலிருந்து விடுபட....

தேங்காய் எண்ணையை கூந்தலின் வேர்க் கால்களில் படும்படி நன்கு சூடு பறக்க தேய்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து பின் சீயக்காய் அல்லது நல்ல Anti Dandruff Shampoo கொண்டு அலசினால் பொடுகுத் தொல்லை போவதோடு, கூந்தல் நன்கு வளரும்.
சின்ன வெங்காயத்தை தேங்காய் எண்ணையில் காய்ச்சி, தலையில் தேய்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின் பாசிப்பயறு மாவை, சாதம் வடித்த கஞ்சியில் கலந்து வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வர, பொடுகுத் தொல்லை போயே போச்சு.

கூந்தல் வேர்க்கால்களில் ஆலிவ் எண்ணையை பஞ்சினால் தேய்த்து வர, பொடுகுத் தொல்லை குறையும், கூந்தல் நன்கு வளரும்.

வெது வெதுப்பான ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் இவற்றுடன் சிறிது எலுமிச்சம் சாறு கலந்து தலையில் தேய்க்கவும். ஒரு மணி நேரம் இதை ஊற வைத்த பின், ஒரு துண்டை ஆவியில் வைத்து, அந்த வெதுவெதுப்பான டவலால் கூந்தலை சுற்றி கால் மணி நேரம் விடவும். பின் நல்ல Anti Dandruff Shampoo உபயோகித்து முடியை அலசி, நல்ல Conditioner உபயோகிக்கவும்.

வெந்தயம் மற்றும் கடுகு இவற்றுடன் கறிவேப்பிலை இலைகளை சேர்த்து இரவு ஊற வைத்து, மறுநாள் காலையில் அரைத்து தலையில் தேய்த்து ஊற வைத்து, அலசினால் பொடுகு குறையும்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலையை நல்ல ஷாம்பூ போட்டு அலச வேண்டும். வாரம் ஒரு முறை சீயக்காய் தூளை சாதம் வடித்த நீரில் கலந்து அலசினால், பொடுகுத் தொல்லை குறையும், கேசம் மிருதுவாகும்.
செம்பருத்தி இதழ்களை சாறு எடுத்து அதை தலையில் தேய்த்து குளிக்கலாம்.

தேங்காய் எண்ணையில் கற்பூர வில்லைகளை போட்டு காய்ச்சி, அதை தலையில் தேய்த்து பின் நல்ல ஷாம்பூ போட்டு குளித்த பின், வெதுவெதுப்பான டவலால் கூந்தலை சுற்றி வைத்து எடுக்கலாம்.



நன்றி : இன்று ஒரு தகவல் ஓர்குட் குழுமம்

0 comments: