இனிமையான ஒரு பாடல் !!!!!!

இது ஒரு இனிமையான பாடல் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் பாடல் ஆரம்பத்தில் , ஒரு அருமையான குறுந்தொகை செய்யுள் ஒன்றை இடைசெறுகலாக , அமைத்திருப்பது, அதுவும், பாடலினையும், அதன் பொருளோடு ஒற்றி அமைத்திருப்பது அழகு.

பாலை நிலத்தை சார்ந்த தலைவி தலைவனை பிரிந்த காலத்தில் இருக்கும் நிலையை வெள்ளிவீதியார் பாடலில் விளக்குகிறார்.


குறுந்தொகை செய்யுள் :

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீயர் வேண்டும்
திதலை அல்குல் என் மா மைக் கவினே-



பொருள் :
சுரந்து வழியும் ஆவின் பால் கன்றுக்கும் உதவாமல் பாத்திரத்திலும் பிடிக்க இயலாது நிலத்தில் வீழ்ந்து வீணாவது போல், எனக்குத் தேவையில்லாத, என் கண்ணாளனாலும் அனுபவிக்கப்படாத என் அழகு பசலை படர்ந்து வீணாகிறதே என்று காதலனைப் பிரிந்திருக்கும் காதலியின் ஏக்கம்.


0 comments: