பொடுகை விரட்ட வேப்பம்பூ..
பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.
அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.
பழங்கள்.. பலன்கள்.. பண்புகள்..
ஆரஞ்சு
தென்கிழக்கு ஆசிய நாடுகள்தான் இதன் தோற்றம்.
முக்கிய சீஸன்: ஜனவரி முதல் பிப்ரவரி.
கலோரி அளவு: ஒரு 100 கிராமுக்கு 48 கி.கலோரி.
ஒரு 100 கிராமில்:
நீர் 87.8%
மாவுச்சத்து 10.6%
தாதுக்கள் 0.3%
கால்சியம் 0.05%
இரும்பு 0.1மி.கி.
பொட்டாசியம் 19.7கி.மி.
தாமிரம் 0.07மி.கி.
குளோரின் 3.2.மி.கி.
வைட்டமின் ‘பி’ 120IU
புரோட்டின் 0.9%
கொழுப்பு 0.3%
நார்ச்சத்து 0.3%
பாஸ்பரஸ் 0.02%
சோடியம் 2.1மி.கி.
மக்னீஷியம் 12.9மி.கி.
கந்தகம் 9.3.மி.கி.
வைட்டமின் ‘ஏ’ 350IU
வைட்டமின் ‘சி’ 68IU
பயன்கள்: வைட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளது. மற்ற பழங்களைவிட கால்சியம் அதிக அளவில் இருக்கிறது. பசி உருவாக்குவதில், நுரையீரல் ஆஸ்துமா பிரச்னைகளில், இருதய நோய்களில், எலும்புகளில், பற்களுக்கு மற்றும் உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதில் இந்தப் பழத்தின் பங்கு அதிகம்.
நன்றி:இன்று ஒரு தகவல். பொது அறிவு தனிஇனம் : ஒர்குட் குழுமம்
தகவல் களஞ்சியம் -I
Labels: தகவல் களஞ்சியம் -I
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment