இன்டர்நெட் பிரவுசிங் செய்திடுகையில் பல இணைய தளங்கள் செக்யூரிட்டி சர்டிபிகேட் பெற்றவை என்ற தகவலை வெளியிட்டிருப்பார்கள். அப்படியானால் சர்டிபிகேட் பெறாதவை உண்டா? சர்டிபிகேட் பெற்றதனால் அந்த தளத்திற்கு மதிப்பு என்ன? ஏன் இந்த சர்டிபிகேட் பெற வேண்டும்? என்று பலவகையான கேள்விகளுக்கான விபரங்களை இங்கு பார்ப்போம்.
ஒரு இணைய தளத்தில் நாம் அளிக்கும் தகவல்கள் பிறர் அதில் புகுந்து அவற்றைத் திருடிப் பெற முடியாத வகையில் என்கிரிப்ட் செய்யப்பட வேண்டும். அப்படி பாதுகாக்கப்படும் வகையில் அமைக்கப்படும் இணைய தளங்களே இந்த சான்றிதழைப் பெறுகின்றன. அப்படியானால் இன்டர்நெட் தளம் ஒன்று பாதுகாப்பானது என்று சான்றிதழ் பெற்றது என்று எப்படி அறிவது? அதற்கு இரண்டு வழிகள் உள்ளன. உங்கள் வெப் பிரவுசரில் வலது கீழ் புறத்தில் ஒரு தாழ்ப்பாள் படம் ஒன்று காணப்படும். அதுவும் பூட்டப்பட்ட நிலையில் காட்டப்படும். இரண்டாவது வழி அதன் யு.ஆர்.எல். எனப்படும் முகவரியினைப் பார்த்து அறிந்து கொள்ளலாம். அதன் தொடக்கத்தில் "http"என்பதற்குப் பதிலாக "https"என்று இருக்கும். இந்த கூடுதலான "s" எழுத்து அந்த தளம் பாதுகாப்பானது (secure) என்று காட்டுகிறது. எனவே ஒரு தளத்தை நீங்கள் பார்க்கையில் இந்த இரண்டில் ஏதாவது ஒன்று இருந்தால் அது பாதுகாப்பானது எனச் சான்றிதழ் பெற்ற தளமாகும்.
நன்றி :இன்று ஒரு தகவல் ஒர்குட் குழுமம்.
இணைய தள பாதுகாப்பு
Labels: இணைய தள பாதுகாப்பு
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment